- பாசிபருப்பு 1/2 cup
- பெரிய வெங்காயம் 1 1/2 cup
- பெருஞ்சீரகம் தேவையான அளவு
- பச்சை மிளகாய் 2
- கறிவேப்பிலை தேவையான அளவு
- இஞ்சி 1/2 inch
- உப்பு 1 teaspoon
செய்முறை
- பெரிய வெங்காயத்தை வெட்டிக் கொள்ளவும்.
- பச்சை மிளகாயை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
- இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
- பாசிபருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- பாசிபருப்பு ஊறியதும் தண்ணீ்ரை வடித்து மிக்ஸியில் போட்டு உப்பு இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
- அரைத்த பாசிபருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
- அதனுடன் வெட்டிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை பெருஞ்சீரகம் போட்டு பிசைந்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து சிறிதாக வட்டமாக தட்டி
- எண்ணெயில் போட்டு எடுக்கவும், நன்றாக வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

No comments:
Post a Comment