தேவையான பொருட்கள்
- பாசிபருப்பு 1/2 cup
- பெரிய வெங்காயம் 1 1/2 cup
- பெருஞ்சீரகம் தேவையான அளவு
- பச்சை மிளகாய் 2
- கறிவேப்பிலை தேவையான அளவு
- இஞ்சி 1/2 inch
- உப்பு 1 teaspoon
செய்முறை
- பெரிய வெங்காயத்தை வெட்டிக் கொள்ளவும்.
- பச்சை மிளகாயை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
- இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
- பாசிபருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- பாசிபருப்பு ஊறியதும் தண்ணீ்ரை வடித்து மிக்ஸியில் போட்டு உப்பு இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
- அரைத்த பாசிபருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
- அதனுடன் வெட்டிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை பெருஞ்சீரகம் போட்டு பிசைந்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து சிறிதாக வட்டமாக தட்டி
- எண்ணெயில் போட்டு எடுக்கவும், நன்றாக வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
தேவையான பொருட்கள்
- அரைத்தஉளுந்து மா 1 cup
- கருப்பட்டித்துாள் 1 cup
- நல்லெண்ணெய் 1 cup
- தண்ணீ்ர் 1 cup
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் கருப்பட்டித்துாளைப் போட்டுத் தண்ணீ்ரை விட்டு அடுப்பில் வைக்கவும்.
- நன்றாகக் கரைத்து எடுத்து வடிகட்டவும்.
- அடிகனமான வாணலியில் வடிகட்டிய கருப்பட்டி தண்ணீ்ரை விட்டு அதில் உளுந்து மாவைப்போட்டு கட்டி இல்லாமல் இதை அடுப்பில் வைத்துக் கிளறவும்.
- இடையிடையே நல்லெண்ணெய் விட்டு கிளறவும்.
- நன்றாக வெந்து கெட்டியாகி வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
தேவையான பொருட்கள்
கேரட் 2
அரிசி 1 cup
காய்ந்த மிளகாய் 5
சீரகம் 2 tablespoon
பெருங்காயதுாள் சிறிதளவு
எண்ணெய் தேவைக்கு ஏற்ப
உப்பு தேவைக்கு ஏற்ப
செய்முறை
- ஊர வைத்த அரிசி துருவிய கேரட் சீரகம் மிளகாய் உப்பு பெருங்காயதுாள் போட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- அந்த மாவை தோசையாக வார்த்து எடுக்கவும்.
தேவையான பொருட்கள்
- முள்ளங்கி 2
- கோதுமை மா 1 cup
- சிவப்பு மிளகாய்துாள் 1teaspoon
- ஓமம் 1 teaspoon
- மஞ்சள் துாள் 1/4 teaspoon
- தனியான துாள் 1/2 teaspoon
- எண்ணெய் 8 tablespoon
- உப்பு 1/2 teaspoon
செய்முறை
- முள்ளங்கியை நன்கு கழுவி பூத்துருவலாக துருவிக் கொள்ளவும்.
- வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி மிளகாய்துாள் தனியாத்துாள் ஓமம் சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கி கோதுமை மாவுடன் சேர்க்கவும்.
- துருவிய முள்ளங்கி உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து முள்ளங்கித்துருவிலேயே தண்ணீர் சேர்க்கவும்.
- சப்பாத்தி மாவு பதத்திற் குப் பிசையவும்
பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தியாக செய்து பரிமாறவும்.
Ingredients
- 500g pasta
- 3/4 cup (50g) coarse fresh white bread crumbs
- finely grated zest of 1 lemon
- 1 large garlic clove,crushed
- 1/3 cup chopped flat - leaf parsley
- 200g baby spinach
- 200ml sourcream
Method:
- Preheat the grill to medium. Cook pasta in a large saucepan of boiling, salted water according to the packet instructions.
- Meanwhile, spread breadcrumbs on a baking tray and grill, stirring halfway, for 2-3 minutes until toasted.
- Transfer to a bowl and cool slightly. Add the zest, garlic and parsley,then season with sea salt and freshly ground black pepper.
- Drain the pasta and return to the pan. Stir the spinach and creme fraiche through the hot pasta until the spinach has wilted.
- Stir half the gremolada bread crumbs through the pasta.
- Divide among 4 bowls and sprinkle with remaining breadcrumbs to serve.