Tuesday, 20 March 2012

கன்பராவில் ஓர் அனுபவம்


 தொழினுட்ப வளர்ச்சியில் பன்மடங்கு ஆதிக்கம்  செலுத்தும் நாடுகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்றாக விளங்குகின்றது. அந்நாட்டின் தலைநகரான கன்பராவில் தான் நான் பல விடயங்களை அறிந்து கொண்டேன்.

இணையத்தளத்தின் ஊடாக பயணச்சீட்டுக்களை பெற்றுக் கொண்ட நாம் வாகனத்தரிப்பிடத்தில்  வாகனங்களை  நிறுத்திய பின் உள்ளே சென்றோம்.

தானியங்கும் கருவிகளின் ( kiosk )  மூலமாக மீண்டும் பயணச்சீட்டுக்களை சரி பார்த்து விமானத்தில் எந்த இருக்கைகளை பெறலாம் என்பது போன்ற விடயங்களை பிறரின் உதவியின்றி  நாமே நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதனையும் அறிந்து கொண்டேன்.



இவ்வாறே mall  என   ஆங்கிலத்தில் கூறப்படும், ஒரே கூரையின் கீழ் பல வகையான பொருட்களைக் கொள்வனவு   செய்யும் இடங்களிலும் நாமே எமக்கு விரும்பிய பொருட்களை தோ்ந்தெடுத்த பின்னா் அவற்றுக்குரிய பெறுமதியை தானியங்கும் கருவிகளின் உதவியுடன் கொள்வனவு செய்யும் முறையும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தானியங்கும் கருவிகளின் பயன்பாடு சற்று  அதிகமாகவே  இந்நாடுகளில் காணக்கூடியதாக இருக்கிறது.குறிப்பாக வாகனத்தரிப்பிடங்களில் கூட அதற்குரிய சீட்டுக்களை இவ்வியந்திரங்களின் மூலமாக பெற்ற பின்னரே நாம் உள்ளே / வெளியே செல்ல  முடியும்.

இவ்வாறாக பல்வேறு வகையில் இந்நாட்டு வாழ்வியயில் தானியங்கும் கருவிகளின் செல்வாக்கு அதிகரித்து காணப்படுகிறது.




No comments:

Post a Comment